உலகம்

அறிகுறிகள் இன்றி 137 கொரோனா நோயாளர்கள் அடையாளம்

(UTV | சீனா) –  சீனாவின் சிஞ்சியாங்கின் வட மேற்கு பிராந்திய நகரமான காஷ்கரில் நோய் அறிகுறிகள் இன்றி 137 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

காஷ்கரில் கண்டறியப்பட்ட அனைத்து கொரோனா தொற்றாளர்களும் ஒரு ஆடைத் தொழிற்சாலையின் ஊழியர்களும், அவர்களுடன் தொடர்புகளை கொண்டவர்களும் ஆவர் என தெரிவிக்கப்படுகின்றன

அதன்படி சின்ஜியாங் மாகாணத்தின் காஷ்கர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 4.75 மில்லியன் மக்களை உள்ளடக்கிய வெகுஜன பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், காஷ்கரில் உள்ள பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

twitter நிறுவனத்தின் புதிய CEO

அமெரிக்கா தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி

அமெரிக்க முன்னாள் துணை ஜனாதிபதி காலமானார்