சூடான செய்திகள் 1

அறநெறிக் கல்வியை மேம்படுத்தும் வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும்

(UTV|COLOMBO)-அறநெறிக் கல்வியை வலுப்படுத்தும் வகையில் வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தவுள்ளதாக வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஹம்பாந்தோட்ட சீதாராம விகாரையில் நேற்று நடைபெற்ற நிகழ்வின்போதே அமைச்சர் உரையாற்றுகையில் கலாசார அமைச்சர் என்ற வகையில் தான் நடைமுறைப்படுத்தும் முதல் வேலைத்திட்டமாக அது அமையும் என்றும் கூறினார்.
சீதாராம விகாரையில் அமைக்கப்பட்டுள்ள அறநெறிப் பாடசாலைக்கான கட்டடம் நேற்று திறந்து வைக்கப்பட்டது. கட்டடத்திற்கான நிதி அனைவருக்கும் நிவாரணம் என்ற வேலைத்திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

Related posts

டிக்கோயா நீரில் மூழ்கும் அபாயம் (photos)

பெருந்தலைவர் இரா.சம்பந்தனின் இறுதிக் கிரியை இன்று!!

மேலும் 23 கொரோனா நோயாளர்கள் அடையாளம்