நோன்புப் பெருநாள் வாழ்துச் செய்தி
நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், இ.தொ.காவின் பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான் அவர்கள் அனைத்து இஸ்லாமியர்களுக்கும் மகிழ்ச்சியான மற்றும் ஆசீர்வதிக்கப்பட்ட ஈதுல் பித்ர் ஈகைத் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தமது வாழ்த்து செய்தியில் மேலும் தெரிவிக்கையில், உலகெங்கிலுமுள்ள முஸ்லிம்களால் ஒரு மாதகால நோன்பு நோற்று, தலைப்பிறை பார்த்ததன் பின்னர் கொண்டாடப்படும் ஈதுல்-பித்ர் பெருநாளே நோன்பு பெருநாளாகும்.
இஸ்லாத்தின் ஐந்து கடமைகளில் ஒன்றான ரமழான் மாத நோன்பு, உலக ஆசைகளிலிருந்து தூரமாகி, அர்ப்பணிப்பு மற்றும் எளிமையுடனான முன்மாதிரி நடைமுறையை நிலைநிறுத்துவதன் முக்கியத்துவத்தை இந்நாள் பிரதிபலிக்கிறது.
அத்தோடு சமூக, பொருளாதார மற்றும் அரசியல் மாற்றங்களுடன் கூடிய முன்னேற்றகரமான இலங்கை தொடர்பில் இந்த நாட்டு மக்களின் அபிலாஷைகளை நனவாக்கி, சுதந்திரம், சமத்துவம், ஒற்றுமை மற்றும் கண்ணியம் நிலவும் ஒரு சமூகத்தை கட்டியெழுப்ப நாம் எடுக்கும் முன்னெடுப்பில் இஸ்லாத்தின் இந்த போதனைகள் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமையும் என்று நான் நம்புகிறேன்.
மேலும் உலகெங்கிலும் உள்ள அனைத்து முஸ்லிம்களுக்கும் எனது நோன்புப் பெருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதோடு
மறுமலர்ச்சி யுகத்திற்கான எதிர்பார்ப்புகள் நிறைவேறும் சமாதானம், நல்லிணக்கம், சுபிட்சம் நிறைந்த இனிய ஈதுல் பித்ர் நோன்பு பெருநாள் வாழ்த்துகள் என்று தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.
ஊடக பிரிவு
ஜீவன் தொண்டமான்