விளையாட்டு

அர்ஜென்டினா ஐஸ்லாந்திடம் சமநிலை ஆனது அவமானம்

(UTV|RUSSIA)-உலக கிண்ண கால்பந்து போட்டியில் தனது முதலாவது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் அர்ஜென்டின அணி 1-1 என்ற கோல் கணக்கில் சிறிய நாடான ஐஸ்லாந்துடன் மோதியதில் போட்டி சமநிலையில் நிறைவடைந்தது.

இந்த ஆட்டத்தில் அர்ஜென்டின அணியின் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்சி பெனால்டி வாய்ப்பை கோட்டை விட்டார்.

இந்த ஆட்டம் குறித்து அர்ஜென்டின அணியின் முன்னாள் ஜாம்பவான் மரடோனா கருத்து தெரிவிக்கையில், ‘ஐஸ்லாந்து அணியுடனான ஆட்டம் சமநிலையில் ஆனது அவமானமாகும். இந்த ஆட்டத்தில் நான் எந்த வீரரையும் குறை சொல்ல மாட்டேன். மெஸ்சி பெனால்டி வாய்ப்பை தவறவிட்டது தான் வெற்றி கிடைக்காமல் போனதற்கு காரணம் என்று நினைக்கவில்லை. எதிரணிக்கு தகுந்த படி ஆட்ட யுக்தியை அர்ஜென்டினா அணியின் பயிற்சியாளர் அமல்படுத்தவில்லை. இந்த மாதிரி தொடர்ந்து விளையாடினால் அர்ஜென்டினா அணி நாடு திரும்ப முடியாது’ என்றார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவியை நெருங்கிய யாரும் எதிர்ப்பார்க்காத முன்னாள் பிரபல வீரர்!!!

திஸர பெரேரா ஓய்வினை அறிவித்தார்

தோனியின் ஆலோசனையே வெற்றிக்கு காரணம்..! தோனியை பாராட்டிய கோஹ்லி