உள்நாடு

அர்ஜுன ரணதுங்கவை கைது செய்ய உத்தரவு

(UTV | கொழும்பு) – முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவை கைது செய்ய கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2018 ஒக்டோபர் 28 இல் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பான வழக்கில், முன்னாள் கொழும்பு மாநகரசபை ஆணையாளர், குலதிஸ்ஸா கீக்கியானகே உள்ளிட்ட பத்து பேர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டிருந்தனர்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்ட போது, வழக்கின் முதல் சாட்சியாக பெயரிடப்பட்ட முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரனதுங்க நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறிவியதையடுத்து கொழும்பு தலைமை நீதவான் அவரை கைது செய்ய உத்தரவிட்டுள்ளார்.

Related posts

பாணின் விலை அதிகரிப்பு

“அரசாங்கத்தால் ஜனநாயகத்திற்கு மரண அடி” – சஜித்

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 2084 ஆக உயர்வு