வகைப்படுத்தப்படாத

அர்ஜுன மஹேந்திரன் உள்ளிட்ட மூவர் சந்தேகநபர்கள்

(UTV|COLOMBO)-மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி சம்பவத்தில் முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன மஹேந்திரன் உள்ளிட்ட மூன்று பேர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் சந்தேகநபர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.

முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன மஹேந்திரனுக்கு மேலதிகமாக அர்ஜுன் எலோசியஸ் மற்றும் கசுன் பலியசேன ஆகிய இருவரே சந்தேகநபர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற விசாரணைகளுக்காகவே இவர்கள் மூவரும் சந்தேகநபர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது இவர்கள் மூவரும் சம்பவத்தின் சந்தேகநபர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.

அதேவேளை முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன மஹேந்திரனை எதிர்வரும் 15ம் திகதிக்கு முன்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகி வாக்குமூலம் வழங்குமாறும் கொழும்பு கேட்டை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

அதன்படி இது சம்பந்தமான வழக்கை எதிர்வரும் 16ம் திகதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி லங்கா ஜயரத்ன உத்தரவிட்டுள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

அமைச்சர் ஃபைஸர் முஸ்தபாவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை

சிரியாவில் போர் நிறுத்தத்தை மீறி அரசு படையினர் நடத்திய வான்வழி தாக்குதலில் 34 பேர் பலி

இந்தோனேஷியா தங்க சுரங்கத்தில் நிலச்சரிவு-மூவர் உயிரிழப்பு