அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

அர்ச்சுனா MP யின் அதிரடி அறிவிப்பு – MP பதவி கௌசல்யாவிற்கு

பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா, தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை கௌசல்யா நரேன் என்ற பெண்ணுக்கு விட்டுக்கொடுக்கவுள்ளதாக அர்த்தப்படும் வகையிலான பேஸ்புக் பதிவு ஒன்றை இன்றைய தினம் (28) பதிவு செய்துள்ளார்.

குறித்த பதிவில் கடைசி செய்தி!
என் தலைவனின் பாதையில் என் இன மக்களின் விடுதலைற்காக MP பதவி கவுசல்யாவிற்கு!
இப்போது நிராயுதபாணி! என பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார்.

கடந்த தேர்தலில் சுயேட்சைக் குழுவில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அர்ச்சுனா, தற்போது பாராளுமன்ற உறுப்பினராக உள்ளார்.

அவர் பதவி விலகுவாராக இருந்தால் அவரது அணியில் போட்டியிட்டு இரண்டாவது அதிக வாக்குகளைப் பெற்ற கௌசல்யாவுக்கு அந்தப் பதவி செல்லும்.

எவ்வாறாயினும் அர்ச்சனாவும் இந்த பதிவில் மறைமுகமாகத் தாம் பதவி விலகப்போவதாகக் குறிப்பிட்டுள்ளாரே ஒழிய, நேரடியாக எதனையும் விளக்கவில்லை.

இதுகுறித்த அவரது விளக்கத்தைப் பெற முயற்சிக்கப்படுகிறது.

Related posts

பென்சில்கள் குழந்தைகளின் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் – மருத்துவர்கள் எச்சரிக்கை

editor

சாய்ந்தமருது கடலரிப்பால் பாதிப்பு ; உரிய அதிகாரிகள் விரைவான நடவடிக்கை எடுக்க கோரிக்கை !

கொழும்பு குப்பைகள் தொடர்பில் வெளியான தகவல்

editor