கேளிக்கை

‘அருவி’ இந்தியிலும் ரீமேக்

(UTV |  இந்தியா) – 2017-ல் வெளியான ‘அருவி’ திரைப்படம் அனைவரின் இதயங்களிலும் வரவேற்பை பெற்ற, ஒரு தலைசிறந்த படைப்பு! அறிமுக இயக்குனர் அருண் பிரபு இயக்கிய இப்படம், மிகச் சிறந்த விமர்சனங்களை பெற்றது. டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான இந்தப் படத்தில் அதிதி பாலன், அஞ்சலி வரதராஜன், லட்சுமி கோபாலசாமி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இந்த படத்தில் முதல் முறையாக அதிதி பாலன் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த திரைப்படம் இந்தியாவிலும் சர்வதேச திரைப்பட விழாவிலும் பெரும் விமர்சனங்களை பெற்றது. இந்த நிலையில், இப்படம் தற்போது இந்தியிலும் ரீமேக் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆமாம், நீங்கள் சரியாக படிக்கிறீர்கள் – தங்கல் புகழ் இளம் மற்றும் திறமையான நடிகை, பாத்திமா சனா ஷேக் அதிகாரப்பூர்வ இந்தி ரீமேக்கில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இ.நிவாஸ் இயக்கத்தில் ஒரு காமெடி டிராமா கலந்த ஒரு திரைப்படமாக உருவாக இருக்கிறது. இந்தப் படத்தை Applause என்டர்டெயின்மென்ட் என்ற பெயரில் தயாரிக்க, Faith பிலிம்ஸ் சார்பாக விக்கி ரஜனி இணைந்து தயாரிக்கிறார்கள். இந்நிலையில் பாத்திமா தனது புதிய குழுவுடன் போஸ் கொடுத்த புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது. இதனை அறிந்து மகிழ்ச்சி அடைந்த எஸ்.ஆர்.பிரபு தனது மகிழ்ச்சியை சமூக வலைதளங்களில் பகிர்ந்து உள்ளார்.

Related posts

ட்விட்டரில் டிரெண்டாகும் ‘BigilRing’

காஜல் அகர்வாலுக்கு விலங்குகள் நல ஆர்வலர்கள் எதிர்ப்பு…

மீடூ இயக்கத்தில் நானில்லை-நித்யா மேனன்