வகைப்படுத்தப்படாத

அருணாச்சலில் மண்சரிவு; 14 பேர் பலி!

(UDHAYAM, COLOMBO) – அருணாச்சல பிரதேசத்தில் நேற்று திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் 14 பேர் உயிரிழந்தாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அருணாச்சல பிரதேச மாநிலத்தில் பாபம் பரே மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக தொடர்ச்சியான மழை பெய்து வந்தது. இந்த மழையினால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் 14 பேர் மண்ணில் புதைந்து உயிரிழந்தாக அஞ்சப்படுகிறது.

இதனையடுத்து, பேரிடர் மீட்பு படையினர் அங்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுப்பட்டனர். இந்த நிலச்சரிவானது பாபம் பரே மாவட்டத்தில் உள்ள லெப்டாப் என்ற கிராமத்தில் செவ்வாய்க்;கிழமை மதியம் 3 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அருணாசால முதல்வர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,’பாபம் பரே மாவட்டத்தில் உள்ள லெப்டாப் என்ற கிராமத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது குறித்து மிகுந்த வருத்தம் அடைந்துள்ளேன். இந்த விபத்தில் இறங்கவர்களுக்கு இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். நிலச்சரிவில் சிக்கி உள்ளவர்களை மீட்டுக்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையுடன், மாநில காவல்துறையினர் மற்றும் மருத்துவக்குழுவினர் ஈடுப்பட்டு வருகின்றனர்.

Related posts

இந்தோனேசிய கவர்னர் கைது

மீண்டும் ரஞ்சன் ராமநாயக்க உயர்நீதிமன்றில் ஆஜர்

Coach disappointed with World Cup performance