உள்நாடு

அருட்தந்தை சிறில் காமினி CID முன்னிலையில்

(UTV | கொழும்பு) – அருட்தந்தை சிறில் காமினி சற்றுமுன்னர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் (சிஐடி) வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னிலையானார்.

ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் அண்மையில் அருட்தந்தை சிறில் காமினி மற்றும் ஏனைய தரப்பினர் முன்வைத்த குற்றச்சாட்டுகளை நிராகரித்து, அரச புலனாய்வு சேவையின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

இது தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக அந்தத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அருட்தந்தை சிறில் காமினிக்கு அண்மையில் அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது.

எனினும், அவர் அந்தத் திணைக்களத்தில் முன்னிலையாகவில்லை. அவருக்குப் பதிலாக அருட்தந்தையர்கள் 3 பேர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகினர்.

இதன்போது குறித்த மூவரும், வாக்குலம் வழங்குவதற்காக அருட்தந்தை சிறில் காமினிக்கு ஒரு வாரக் கால அவகாசம் வழங்குமாறு கோரியிருந்தனர்.

அதன்படி, உயர் நீதிமன்றத்தில் ஏற்கனவே தான் மனுவொன்றை தாக்கல் செய்துள்ள நிலையில், அன்றைய தினம் முன்னிலையாக முடியாது என அருட்தந்தை சிறில் காமினி தனது சட்டத்தரணிகள் ஊடாகக் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கடந்த 3ஆம் திகதி கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.

தான் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைதுசெய்யப்படுவதனை தடுக்கும் வகையில் அவர் உயர்நீதிமன்றில் குறித்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

    

Related posts

பொலிஸ்மா அதிபராக, சி.டி விக்ரமரத்ன

அனைத்து பௌத்த அறநெறிப் பாடசாலைகளுக்கும் விடுமுறை

ஊரடங்கு உத்தரவை மீறிய 1,169 பேர் கைது