உள்நாடு

அருட்தந்தை சிறில் காமினி சிஐடியில் முன்னிலையாகவுள்ளார்

(UTV | கொழும்பு) – அருட்தந்தை சிறில் காமினி இன்று(28) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகவுள்ளார்.

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் அருட்தந்தை சிறில் காமினி உள்ளிட்ட தரப்பினர் முன்வைத்த குற்றச்சாட்டை நிராகரித்து அரச புலனாய்வு சேவையின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் கடந்த 25ம் திகதி முறைப்பாடு செய்திருந்தார்.

இது தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் இன்று(28) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

சமகி ஜன பலவேகயவின் தலையைகம் திறப்பு [VIDEO]

அரசாங்கத்துடன் உடன்படிக்கை செய்ய தயாரில்லை – சஜித்

புகையிரதக் கட்டணமும் அதிகரிக்கப்படலாம்