உள்நாடு

அரச வைத்திய அதிகாரிகள் பணிப்புறக்கணிப்பில்

(UTV | கண்டி) – கண்டி மாவட்டத்திற்கான அரச வைத்திய அதிகாரிகள் பணிப்புறக்கணிப்பு ஒன்றினை முன்னெடுத்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் கண்டி மாவட்ட செயலாளர் வைத்தியர் பிரேமலால் தெரிவித்திருந்தார்.

மெனிக்ஹின்ன வைத்தியசாலையின் பிரதம வைத்திய அதிகாரி ஒருவர், பிரதேச அரசியல்வாதி ஒருவரினால் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று(21) காலை 8 மணி முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

எவ்வாறாயினும் சந்தேக நபரை கைது செய்வதற்கான தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Related posts

அரச ஊழியர்களுக்கான அறிவிப்பு

சஹ்ரானின் மனைவியிடம் இன்று முதல் வாக்குமூலம்

வெலிகட சிறைச்சாலைக்கு ஜனாதிபதி திடீர் விஜயம்