உள்நாடு

அரச வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லை அதிகரிப்பு

(UTV | கொழும்பு) – அரச வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லை 60 இல் இருந்து 61 அதிகரிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போது குறித்த அறிவிப்பை அமைச்சரவை இணைப் பேச்சாளர் ரமேஷ் பத்திரண அறிவித்துள்ளார்.

மேலும், ஏனைய அரச ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது தொடர்பில் பரிதுரைகளை வழங்க சிறப்புக் குழு ஒன்றை அமைக்கவும் அமைச்சரவை முடிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ரஷ்யாவின் ‘ஸ்புட்னிக் வி’ வந்தடைந்தது

IMF பிரதிநிதிகளை சந்திக்கின்றோம்- சஜித் அறிவிப்பு

வாதுவை மற்றும் களுத்துறை உள்ளிட்ட பகுதிகளுக்கு நீர்வெட்டு