சூடான செய்திகள் 1

அரச வெசாக் உற்சவம் இன்றும்(17)  நாளையும்(18) ரத்பத் ரஜமஹா விஹாரையில்

(UTV|COLOMBO) இம்முறை அரச வெசாக் உற்சவம் இன்றும்(17)  நாளையும்(18)  தெல்வத்த புராண தொட்டகமு ரத்பத் ரஜமஹா விஹாரையில் இடம்பெறவுள்ளது.

இன்று பிற்பகல் இடம்பெறும் தேசிய நிகழ்வில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன உள்ளிட்ட அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் என பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.

நாளை இடம்பெறும் சமய வழிபாடுகள் பிரதமர் தலைமையில் இடம்பெறும். அரச வெசாக் வைபவத்தை முன்னிட்டு, ஞாபகார்த்த முத்திரையொன்றை வெளியிடுவதற்கும் தபால் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

 

 

 

Related posts

மதுமாதவ அரவிந்த இராஜினாமா

ஷாபி விசாரணை ஒத்திவைப்பு

சீனி விலைஅதிகரிக்கப்படமாட்டாது…