சூடான செய்திகள் 1

அரச வர்த்தக கூட்டுத்தாபனத்திற்கு 61.4 மில்லியன் ரூபா இலாபம்

(UTV|COLOMBO)-கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் கீழான அரச வர்த்தக கூட்டுத்தாபனத்திற்கு கடந்த வருடம் 61.4 மில்லியன் ரூபா இலாபம் கிடைத்துள்ளதாக அதன் தலைவர் ஹுசைன் பைலா தெரிவித்தார்.

அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலிலும் நேரடி கண்காணிப்பிலும் இந்த கூட்டுத்தாபனம் இவ்வாறான ஒரு இலாபத்தை ஈட்ட முடிந்தது என தெரிவித்த அவர் இவ்வருடம் காலி , திருகோண மலை ஆகிய மாவட்டங்களிலும் புதிய கிளைகளை திறந்து வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

1971 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் கிளைகள் தற்போது நாரஹேன்பிட்டி , அனுராதாபுரம் , யாழ்ப்பாணம் ,கண்டி, மாத்தறை , பொலநறுவை ,குருணாகல், சாய்ந்தமருது ஆகியவற்றில் தற்போது இயங்கி வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

2017 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2018 ஆம் ஆண்டு 15.6% இலாப அதிகரிப்பு ஏற்பட்டது. கொழும்பு நவமாவத்தையை தலைமையமாகக் கொண்ட அரச வர்த்தக கூட்டுத்தாபனமானது அலுவலக உபகரணம் ,எழுதுகருவிகள் , காகிதாதிகள் ,கணனிகள்,மடிக்கணினி ,இரசாயன மருந்துப்பொருட்கள் ,குளிரூட்டிகள்,இயந்திராதிகள் மற்றும் இலத்திரனியல் உபகரணங்கள் ,மின் உபகரணங்கள் ஆகியவற்றை விற்பனை செய்து வருகின்றது .

 

 

 

 

Related posts

சாதாரணதரப் பரீட்சை தொடர்பில் இதுவரை 50 முறைப்பாடுகள்

தேசிய பூங்காக்களுக்கு பூட்டு

பிரிகேடியர் பிரியங்க இலங்கையை வந்தடைந்தார்