வகைப்படுத்தப்படாத

அரச முகாமை உதவியாளர் சேவைக்கான போட்டிப் பரீட்சையின் முடிவுகள் வெளியீடு

(UTV|COLOMBO)-அரச முகாமை உதவியாளர் சேவைக்கான வரையறுக்கப்பட்ட போட்டிப் பரீட்சையின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதாக பொதுநிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

திறந்த போட்டிப் பரீட்சைக்கான பெறுபேறுகள் விரைவில் வெளியாகும். மொத்தம் 68 ஆயிரத்திற்கும் அதிகமான பரீட்சார்த்திகள் இந்தப் பரீட்சைகளுக்குத் தோற்றினர். இவர்களுள் ஆயிரத்து 377 பேருக்கு நூற்றுக் நூறு புள்ளிகள் கிடைத்திருப்பதாக அமைச்சின் அரச கூட்டுச் சேவைப் பணிப்பாளர் நாயகம் கே.வீ.பீ.எம்.ஜீ.கமகே தெரிவித்தார்.

அரச முகாமைத்துவ சேவையில் தற்சமயம் ஆறாயிரத்து 139 வெற்றிடங்கள் காணப்படுகின்றன. இந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கான அனுமதி திறைசேரியிடம் இருந்து கிடைக்கப்பெற்றுள்ளது. அடுத்த வருட முதற்காலாண்டுப் பகுதிக்குள் இந்த வெற்றிடங்கள் நிரப்பப்படும் என்று திரு.கமகே தெரிவித்தார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

தலைவர் பதவியில் இருந்து தெரேசா மேய் விலகினார்

India denies asking Trump to mediate in Kashmir

Update – அனர்த்தங்களால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு