உள்நாடுசூடான செய்திகள் 1

அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள அறிவுறுத்தல்

(UTV|கொழும்பு)- எதிர்வரும் பொதுத் தேர்தலில் எந்தவொரு கட்சிக்காக பணியாற்றவோ, அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடவோ முடியாது என அனைத்து அரச நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பணிப்பாளர் சபை உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளார்.

ஒரு கட்சியின் சார்பாக அரசியலில் ஈடுபட விரும்பினால், உத்தியோகப்பூர்வமாக இராஜினாமா செய்ததன் பின்னர் அதனை மேற்கொள்ள முடியும் என ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரச நிறுவன தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் அரசாங்கத்திற்காக அரசியல் செய்ய வேண்டும் என ஜனாதிபதி ஒருபோதும் எதிர்ப்பார்க்கவில்லை என ஜனாதிபதி ஊடக பிரிவு வௌியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

நாமலின் சட்டப் பட்டம் போலியானது என்கிறார் துஷார ஜயரத்ன

editor

உயர் நீதிமன்ற நீதிபதிகளின் பெயர்களை பரிந்துரைக்க தடை!

கோதுமை மா விலை அதிகரிப்பு குறித்து இன்று இறுதித் தீர்மானம்