அரசியல்உள்நாடு

அரச தொழில்முனைளுக்காக அறிவை பரிமாற்றிக்கொள்ளும் செயலமர்வு

பொருளாதார நிலைத்தன்மையை வலுப்படுத்தல் மற்றும் அரச சேவை வழங்குதலை மேம்படுத்தல் என்பவற்றுக்காக அரசாங்கத்தின் நீண்ட கால அர்ப்பணிப்பின் ஒரு பகுதியாக அரச தொழில்முனைவுகளுக்காக அறிவை பரிமாற்றிக்கொள்ளும் செயலமர்வு இன்று (25) கொழும்பு மிலோதா எக்கடமியில் நடைபெற்றது.

கொழும்பு பல்கலைக்கழகத்தில் (Master of Business Administration) – MBA பழைய மாணவர் சங்கத்தின் உதவியுடன், ஜனாதிபதி செயலகம் இந்த செயலமர்வை ஏற்பாடு செய்திருந்ததுடன், அரச தொழில்களின் வினைத்திறன், பொறுப்பு மற்றும் தேசிய பொருளாதார அபிவிருத்திக்கான உதவிகளை மேம்படுத்த நிறுவன கட்டுப்பாடு, நிதி முகாமைத்துவம் மற்றும் ஊழல் ஒழிப்பு செயற்பாடுகளை பலப்படுத்துவது குறித்து இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளர் (நிதி மற்றும் பொருளாதார அலுவல்கள்) ஜீ.எம்.ஆர்.டீ அபோன்சுவினால் அரச தொழில்முனைவு கட்டுப்பாடுகளை மேம்படுத்துவது தொடர்பில் கருத்து தெரிவித்தார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் MBA பழைய மாணவர்கள் சங்கத்தின் தலைவர் சுரஜ் ரதம்பொல செயலமர்வின் நோக்கம் மற்றும் அரச தொழில் முனைவின் வினைத்திறனுக்கான அறிவுப் பரிமாற்றத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

பிரதான மூன்று அமர்வுகளின் கீழ் இந்த செயலமர்வு இடம்பெற்றதுடன், “அரச தொழில் முனைவுக்கான கட்டுப்பாடு” என்ற அமர்வு ஜனாதிபதி சட்டத்தரணி மற்றும் சிரேஷ்ட சபையின் உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ கப்ராலினாலும், “அரச தொழில்முனைவுக்கான நிதி ஒழுக்கம் மற்றும் பொறுப்பு” என்ற அமர்வு CA இலங்கை நிறுவன கட்டுப்பாட்டு குழுவின் தலைவர் மனில் ஜயசிங்கவினாலும், “அரச தொழில் முனைவுக்கான ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் பொருத்தப்பாடு” என்ற அமர்வு இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்கான ஆணைக்குழுவின் ஆணையாளர் ஷேதிய குணசேகரவினாலும் நடத்தப்பட்டது.

முன்னைய அரசாங்கம் சில நிறுவனங்களை மூடுவதற்கும் சில நிறுவனங்களை தனியார் மயப்படுத்தவும் முன்னின்றதுடன், அதற்கு மாறாக தற்போதைய அரசாங்கம் அரசாங்கத்தின் உரிமங்களை தக்க வைத்துக்கொண்டு செயற்திறன் குறைந்த அரச தொழில்களை மீளாய்வு செய்தல், ஒருங்கிணைப்பதற்கான ஆய்வுகளை செய்தல், வினைத்திறனை அதிகரிக்க முகாமைத்துவ கட்டமைப்பில் மாற்றம் செய்தல் தொடர்பில் கவனம் செலுத்தி மிகவும் மாற்றமான முறைமைக்குள் சென்றுள்ளது. இந்நிலையில் இந்த செயலமர்வு அரசாங்கத்தின் புதிய பிரவேசத்திற்கு அமைவான மறுசீரமைப்புக்கள் மற்றும் புத்தாக்கங்களை செயற்படுத்த தேவையான புரிதலுடன் தீர்மானங்களை எடுப்பதற்கான களத்தையும் அமைக்கும்.

அதேபோல் இந்த செயலமர்வின் ஊடாக அரச தொழில்முனைவுகளின் வினைத்திறனை மேம்படுத்துவதால், “Clean Sri Lanka” வேலைத்திட்டத்தின் நோக்கத்துடன் நேரடியாக இசைவடையும் பொறுப்பு மற்றும் நிலையான கலாசாரத்தை கட்டியெழுப்ப அரசாங்கம் எதிர்பார்க்கிறது.

ஓரளவு செயல்திறன் குறைந்த மற்றும் பொருளாதார தாக்கங்களுக்கு குறிப்பிட தக்க அளவில் தேவையுள்ளதாக காணப்படும் அரச தொழில் முனைவுகள் உள்ளடங்களாக சரியான நியதிகளின் அடிப்படையில் 20 அரச தொழில் முனைவுகளின் பிரதிநிதிகள் இந்த செயலமர்விற்காக தெரிவு செய்யப்பட்டிருந்துடன், இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனம், சிலோன் கப்பல் கூட்டுத்தாபனம், சீ – நோர் மன்ற நிறுவனம்,எல்கடுவ பெருந்தோட்ட நிறுவனம், கஹடகஹ கிரெபயிட் லங்கா நிறுவனம், இலங்கை கனிப்பொருள் மணல் நிறுவனம், இலங்கை பொஸ்பேட் நிறுவனம்,லங்கா சதொச நிறுவனம்,இலங்கை சீனி நிறுவனம், மில்கோ (தனியார்) நிறுவனம் உள்ளிட்ட பல நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தி அவற்றின் தலைவர்கள், நிறைவேற்று அதிகாரிகள், திறைசேரி அதிகாரிகள், அமைச்சு அதிகாரிகள், சபைகளின் உறுப்பினர்கள் உள்ளிட்ட சுமார் நூறு பிரதிநிதிகள் இதில் கலந்துகொண்டிருந்தனர்.

-ஜனாதிபதி ஊடகப் பிரிவு

Related posts

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு மதுபானசாலைகளுக்கு பூட்டு

editor

கல்முனையில் – போஷனை மிகுந்த உணவுகளை சுவையாக தயாரித்து வழங்கும் செயற்றிட்டம் .

18 விசாரணை அறிக்கைகள் – திருப்பி அனுப்பிய சட்டமா அதிபர்