சூடான செய்திகள் 1

அரச துறைக்கு இவ்வருடத்தின் முதலாவது காலாண்டில் பத்தாயிரம் பேர் இணைப்பு

(UTV|COLOMBO)-அரச துறைக்காக இவ்வருடத்தின் முதலாவது காலாண்டில் ஒன்பதினாயிரத்து 851 பேர் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.

அரச துறையை சேர்ந்த ஏழாயிரத்து 750 பேர் ஓய்வு பெற்றமையினாலும், பதவியை இராஜினாமா செய்தமையினாலும் ஏற்பட்ட வெற்றிடங்களுக்காக இவர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டிருக்கிறார்கள்.

மாகாண சபைகள் ஊடாக ஏழாயிரத்து 800 பேர் இணைத்துக் கொள்ளப்பட்டிருக்கிறார்கள்.

அரச துறை பற்றி இவ்வருடத்தின் முதலாவது காலாண்டில் அரச துறை ஊழியர்கள் தொடர்பான அறிக்கையை நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர இந்த வருடத்தின் முதலாவது காலாண்டில் அமைச்சரவைக்கு சமர்ப்பித்திருந்தார் என அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் இந்த கருத்தை வெளியிட்டார்.அரச துறையின் சகல நிறுவனங்களும் தேசிய சம்பளக் கொள்கையுடன் இணைந்து கொள்வது அவசியமாகும்.

உரிய அங்கீகாரம் இன்றி, மேலதிக ஊழியர்களை சேவையில் இணைத்துக் கொள்வது தொடர்பாக உரிய நிறுவனங்களின் தலைவர்கள் பொறுப்புக் கூறுவது அவசியமாகும் என்றும் அமைச்சர் கூறினார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

கொள்கலன் பாரவூர்தி சாரதிகள் சேவை புறக்கணிப்பில்

ஆளுநர் பதவியை இராஜினாமா செய்தார் முஸம்மில் – சஜித்திற்கு ஆதரவு.

editor

தெதுரு ஓயாவில் மிதந்து வந்த சடலம் ​