உள்நாடு

அரச – தனியார் ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க கோரிக்கை

(UTV | கொழும்பு) – அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவினை கருத்தில் கொண்டு, அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு அவசியமான நடவடிக்கையை அரசாங்கம் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

அடுத்த வரவு – செலவுத் திட்டத்தில் சம்பள அதிகரிப்பு இடம்பெறாவிட்டால், எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுக்க உள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

அனைத்து நிறுவனங்களின் ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் வசந்த சமரசிங்க, அகில இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஜயந்த பண்டார மற்றும் ஜே.வி.பியின் நிர்வாக செயலாளர் கே.டி. லால்காந்த ஆகியோர் கொழும்பில் நேற்று(28) இடம்பெற்ற ஊடக சந்திப்பில், இது தொடர்பில் கருத்து தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

கடற்தொழில் அமைச்சர் – இலங்கைக்கான சீன தூதுவர் இடையில் சந்திப்பு

editor

இலங்கை மத்திய வங்கி விடுத்த முக்கிய அறிவிப்பு!

வரவு – செலவுத்திட்டத்தின் ஊடாக “டிஜிகொன்” பொருளாதார எண்ணக்கரு முன்மொழிவுகளை ஜனாதிபதி முன்வைப்பார் – சச்சிந்ர சமரரத்ன.