உள்நாடுசூடான செய்திகள் 1

அரச, தனியார் துறை பணிகளை ஆரம்பிக்க தீர்மானம்

(UTV|கொழும்பு)- எதிர்வரும் சில தினங்களில் அரச மற்றும் தனியார் துறை பணிகளை மீண்டும் ஆரம்பித்து அன்றாட நடவடிக்கைகளை விரைவில் வழமைக்கு கொண்டுவரவேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தின் அடுத்த கட்ட பணிகள் தொடர்பாக அமைச்சுக்களின் செயலாளர்களுடன் நேற்று (15) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற விசேட சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டார்.

தேசிய பொருளாதாரத்தையும் மக்கள் வாழ்க்கையையும் பாதுகாக்கும் வகையில் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

கடமைகளை தடையின்றி மேற்கொள்ளக்கூடிய வகையில் ஊரடங்கு சட்டத்தை தளர்த்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

மக்கள் ஒன்றுகூடுவதற்கு இடமளிக்காது உரிய சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றி பணிகளை மேற்கொள்ளும் பொறுப்பு அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் நிறுவனத் தலைவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாய, மீன்பிடி மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட கைத்தொழில் நிறுவனங்களை மீண்டும் செயற்படுத்துவதற்கு தேவையான பின்புலத்தை அமைப்பதற்குத். தேவையான உதவியை அமைச்சுக்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி அவர்கள் அமைச்சுக்களுக்கு பணிப்புரை விடுத்தார்.

ஏனைய நாடுகள் முகம்கொடுத்துள்ள நிலைமையை கருத்திற்கொண்டு தேசிய விவசாய பொருளாதாரம் தொடர்பாக விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி ஜயசுந்தர, ஜனாதிபதியின் ஆலோசகர் லலித் வீரதுங்க, பிரதமரின் செயலாளர் காமினி செனரத், அமைச்சரவையின் செயலாளர் எஸ். அமரசேக்கர ஆகியோரும் அமைச்சுக்களின் செயலாளர்களும் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர்.

Related posts

போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது

மேலும் 322 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

கரையோர மார்க்கத்தில் பயணிக்கும் ரயில் நேரங்களில் மாற்றம்