(UTV | கொழும்பு) – பட்டதாரிகளுக்கு நிலவும் பதவி வெற்றிடங்கள் தொடர்பில் அரச நிறுவனங்களின் தகவல்களை திரட்டும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொதுச்சேவை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.
பொதுச்சேவையில் பயிற்சிக்காக இணைத்துக்கொள்ளப்பட்ட பயிலுனர் பட்டதாரிகளுக்கு நிரந்த நியமனம் வழங்கும் பொருட்டு இந்த தகவல்கள் திரட்டப்படுவதாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறி தெரிவித்துள்ளார்.
இதுவரை 53,000 இற்கும் மேற்பட்ட பட்டதாரிகள் பயிலுனர்களாக சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இவர்களில் ஒரு பிரிவினர் பாடசாலைகளில் சேவையாற்றுகின்றனர்.
![](https://english.utvnews.lk/wp-content/uploads/2020/10/UTV-NEWS-ALERT.jpg)