உள்நாடு

அரச சேவைகள் தொடர்பான புதிய குழு

(UTV | கொழும்பு) –  அரச சேவையின் நடைமுறைகள்  தொடர்பான தீர்மானங்களை எடுப்பதற்காக பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இவ்வருட இறுதியில் பெருமளவிலான அரச உத்தியோகத்தர்கள் ஒய்வு பெறவுள்ள  நிலையில் அரச உத்தியோகத்தர்களை சமநிலைப்படுத்தும் நோக்கில் இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இதற்கமைய இக் குழுவில் பொது நிர்வாக அமைச்சின் செயலாளர், ஒருங்கிணைந்த சேவைகள் பணிப்பாளர் நாயகம், முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர், உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் மேலதிக செயலாளர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் – ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்

editor

PHI அதிகாரிகள் – அனில் ஜாசிங்க இடையே இன்று கலந்துரையாடல்

சம்பிக்க ரணவக்கவின் வாகன சாரதிக்கு பிடியாணை