சூடான செய்திகள் 1

அரச செலவீனங்களுக்கு ரூ.1,474 பில்லியனை ஒதுக்கும் கணக்கு வாக்கெடுப்பு பாராளுமன்றில் நிறைவேற்றம்

(UTV|COLOMBO) – எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் நான்கு மாத காலங்களுக்கான அரசாங்க செலவீனங்களுக்காக 1,474 பில்லியன் ரூபாவை ஒதுக்கும் கணக்கு வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

குறித்த தொகைக்கு மேலதிகமாக அரசாங்கத்தின் சார்பில் திரட்டப்படவேண்டிய கடன் தொகை 721 பில்லியன் ரூபாவை விஞ்ஞாததாக இருப்பதற்கும் பாராளுமன்றத்தின் அனுமதி நிதி அமைச்சரினால் கோரப்பட்டது.

இதனை அடுத்து மக்கள் விடுதலை முன்னணி மாத்திரம் தமது எதிர்ப்பை முன்வைத்த நிலையில் வாக்கெடுப்பு இல்லாது கணக்கு வாக்கெடுப்பு சபையில் நிறைவேற்றப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

சிறைச்சாலை அதிகாரி கொலை தொடர்பில் மற்றுமொருவர் கைது

கேரள கஞ்சா தொகையுடன் இருவர் கைது

லொறி விபத்து – ஐவர் படுங்காயம்