உள்நாடு

அரச சார்பற்ற நிறுவனங்களின் மீளாய்வு கூட்டம்

நேற்று (27) உலக அரச சார்பற்ற நிறுவனங்கள் தினமாகும். திருகோணமலை மாவட்டத்தில் இயங்கும் அரச சார்பற்ற நிறுவனங்கள் மாவட்ட மக்களுக்கும் பிள்ளைகளுக்கும் பெருமளவிலான சேவைகளை வழங்கி வருகின்றது. எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அனைத்து வேலைத்திட்டங்களையும் உரிய நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு வெற்றிகரமாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

திருகோணமலை மாவட்டத்தில் இயங்கி வரும் அரச சார்பற்ற நிறுவனங்களின் முன்னேற்ற மீளாய்வு கூட்டமானது இன்று (27) திருகோணமலை மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் மேலதிக அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

2024 ஆம் ஆண்டு முதல் காலாண்டில் மாவட்டத்தில் செயற்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படும் செயற்திட்டங்கள் பற்றிய தெளிவூட்டல் அரசு சாரா நிறுவனங்களின் பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்டது.மேலும், கடந்த 2023 ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

40 இற்கும் மேற்பட்ட அரசு சாரா நிறுவனங்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. மேலும் அரசு சாரா நிறுவனங்களின் பிரதிநிதிகள் தமது கருத்துக்களை முன்வைப்பதற்கும் இதன்போது சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.

இக்கூட்டத்தில் அரசு சாரா நிறுவன ஒருங்கிணைப்பதிகாரி ஏ.எம்.எஸ்.பி.அத்தநாயக்க,நுண் நிதியங்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்களுக்கான மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கே.நிர்மலகாந்தன் மற்றும் அரசு சாரா நிறுவனங்களின் பிரதிநிதிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Related posts

திருக்கோணேஸ்வரர் ஆலய வருடாந்த திருவிழா ஒத்திவைப்பு

இன்று ரணில் அநுரவுக்கு பாசம் – அநுர ரணிலுக்கு பாசம் – சஜித்

editor

எவன்ட் கார்ட் நிறுவன தலைவர் நிஸ்ஸங்க ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு