உலகம்

அரச குடும்ப உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகுவதற்கு மகாராணி அனுமதி

(UTV|இங்கிலாந்து) – இளவரசர் ஹரி மற்றும் மேகன் ஆகியோருக்கு பிரித்தானிய அரச குடும்பத்தின் சிரேஷ்ட உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகுவதற்கு இரண்டாம் எலிஸபெத் மகாராணி அனுமதி வழங்கியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இளவரசர் சார்ள்ஸ், இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசர் ஹரி ஆகியோர் நேற்று மகாராணியை சந்தித்து கலந்துரையாடிய நிலையில், 93 வயதான இரண்டாம் எலிஸபெத் மகாராணி தமது பேரக் குழந்தைகளின் விருப்பத்திற்கு அனுமதி வழங்கி அவர்களுக்கு ஆசிர்வாதம் வழங்கியுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

தமது குடும்பம் உள்ளிட்ட அரச குடும்பம் ஹரி மற்றும் மேகனுக்கு சகல ஒத்துழைப்புகளையும் வழங்குவதாக மகாராணி தெரிவித்துள்ளார்.

ஹரி குடும்பத்தினர் பிரித்தானியா மற்றும் கனடாவில் வாழ்வதற்குத் திட்டமிட்டுள்ளதற்கும் இணக்கம் தெரிவித்துள்ள மகாராணி, இது குறித்து இறுதித் தீர்மானத்தை எடுப்பதற்கு கால அவகாசம் தேவை எனவும் தெரிவித்துள்ளார்.

Related posts

அமெரிக்காவில் வலுக்கும் ‘டெல்டா’

குவைத்தில் பாரிய தீ விபத்து 35 பேர் பலி

கொரோனா வைரஸ் : உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு