சூடான செய்திகள் 1

அரச ஊழியர்கள் தமது கடமை நேரத்தில் அணிய வேண்டிய சீருடை…

(UTV|COLOMBO)  அரச ஊழியர்கள் தமது கடமை நேரத்தில் அணிய வேண்டிய சீருடை தொடர்பாக நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பான அமைச்சரவையின் தீர்மானம் பின்வருமாறு:

27.அரச ஊழியர்களின் சீருடை (நிகழ்ச்சி நிரலில் 86ஆவது விடயம்)

அரச நிர்வாக விடயம் வழங்கப்பட்டுள்ள அமைச்சில் செயலாளரிடம் நிறுவன – மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கமைவாக அரச ஊழியர்களின் சீருடை குறித்த சுற்றறிக்கை ஒன்று 2019.05.29 அன்று வெளியிடப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த சுற்றறிக்கையை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் அரச நிர்வாகத்துக்கு பொறுப்பான அமைச்சரிடம் சமர்பிக்கப்பட்டுள்ள பல்வேறு உத்தரவுகளை கவனத்தில் கொண்டு மேலே குறிப்பிடப்படும் சுற்றறிக்கையில் திருத்தத்தை மேற்கொள்வதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக அரச ஊழியர்களின் பணி நேரத்தில் தமது அலுவலகத்துக்கு வரும் பொழுது ஆண் ஊழியர்கள் காற்சட்டை மற்றும் சேர்ட் அல்லது தேசிய சீருடையுடன் இருப்பதுடன் பெண் ஊழியர்கள் சாரி, ஒசரி அல்லது அரச சேவையின் கௌரவத்தை பாதுகாக்கும் வகையில் பொருத்தமான சீருடையை அணிந்திருக்க வேண்டும் என்பதுடன் எப்பொழுதும் ஊழியர்களின் முகம் தெளிவாக இருக்க வேண்டும் என்பதுடன் பொதுமக்கள் பாதுகாப்பு தொடர்பில் விதிக்கப்பட்டுள்ள ஒழுங்கு விதிகளுக்கு தடை ஏற்படாத வகையிலான சீருடையாக இருக்க வேண்டும் என்பது போன்ற ஒழுங்கு விதிகளை உள்ளடக்கி சுற்றறிக்கையை ஆலோசனையை வெளியிடுவதற்காக அரச நிர்வாகம் இடர் முகாமைத்துவம் மற்றும் கிராம பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

 

Related posts

நிதி அமைச்சரின் அறிவிப்பு

சுற்றாடலுக்கு ஏற்றவகையில் அமைக்கப்படவுள்ள தொழிற்சாலைகள்-அமைச்சர் ரிஷாத்

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரை கடல் கொந்தளிப்பு