சூடான செய்திகள் 1

அரச ஊழியர்களுக்கு புதிய ஊதியத் திட்டம்-நிதி அமைச்சு

(UTV|COLOMBO)-எதிர்வரும் காலங்களில் அரச ஊழியர்களுக்கான புதிய ஊதியத் திட்டமொன்றைத் தயாரிப்பதாக நிதி அமைச்சினால் ரயில்வே தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று (13) பிற்பகல் ரயில்வே தொழிற்சங்கத்தினருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது, அமைச்சர் மங்கள சமரவீர இது குறித்து தெரிவித்துள்ளதாக அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.

நேற்றைய பேச்சுவார்த்தையின்போது, நிதி அமைச்சர் மங்கள சமரவீர, போக்குவரத்து அமைச்சின் செயலாளர் ஜீ.எஸ். விதானகே, அமைச்சர் மகிந்த அமரவீர, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஊழியர்கள் எதிர்நோக்கும் சம்பளப் பிரச்சினையை இன்று (14) அமைச்சரவையில் முன்வைக்கவுள்ளதாக நிதி அமைச்சர் இதன்போது கூறியுள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் இதுவரை நாட்டிற்கு திரும்பவில்லை

மினுவாங்கொட களு அஜித் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பலி

திஹாரியில், காணாமல் போன பஸ்னா சடலமாக மீட்பு!