உள்நாடுசூடான செய்திகள் 1

அரச ஊழியர்களின் சம்பளத்தில் மாற்றம்!

இலங்கையில் அரச ஊழியர்களின் ஏப்ரல் மாதத்திற்கான சம்பளம் எதிர்வரும் 10ஆம் திகதிக்கு முன்னர் வழங்கப்படும் என்று நிதியமைச்சு அறிவித்துள்ளது.

இந்த சம்பளத்தில் 2024ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்ட, அதிகரிக்கப்பட்டுள்ள அரச ஊழியர் கொடுப்பனவும் உள்ளடங்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, கூடுதலாக ஒவ்வொரு பணியாளருக்கும் 10,000 ரூபாய் கொடுப்பனவு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஏப்ரல் மாதத்திற்கான ஓய்வூதியமும் 10ஆம் திகதிக்கு முன்னர் வழங்கப்படும் என்று இலங்கை அரசு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ரயில் கட்டணங்கள் 15 வீதத்தால் திருத்தம்-இதிபொலகே

பதில் பிரதம நீதியரசராக புவனெக்க அலுவிஹார பதவிப்பிரமாணம்

ஜூலை முதல் மின்கட்டணம் மாற்றியமைக்கப்படும்