உள்நாடு

அரச ஊடக நிறுவனங்களுக்கு திறைசேரியில் இருந்து நிதி

(UTV | கொழும்பு) – இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம், இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் மற்றும் சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலைப்பின்னல் முதலான நிறுவனங்களுக்கான மீண்டெழும் செலவுக்காக (Recurring expense) திறைசேரியில் நிதியைப் பெற்றுக்கொள்ளுதல்.

கொவிட் 19 வைரஸ் தொற்று பரவியதைத் தொடர்ந்து இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம், இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் மற்றும் சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலைப்பின்னல் ஆகியவற்றின் வருமானம் குறைவடைந்ததன் காரணமாக இந்த நிறுவனங்களின் சம்பளம் மற்றும் அத்தியாவசிய செலவுகளை சமாளிப்பதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளன.

இதனால் 2020 ஆம் ஆண்டில் செப்டெம்பர் மாதம் தொடக்கம் டிசம்பர் மாதம் வரையிலான 4 மாத காலத்திற்கு இந்த நிறுவனங்களின் அத்தியாவசிய Recurring expense செலவுகளுக்கான நிதியை திறைசேரியில் பெற்றுக்கொள்வதற்காக வெகுஜன ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த நிறுவனங்களின் வருமானத்தை அதிகரிப்பதற்காக மூலோபாய திட்டத்தை தயாரித்து திறைசேரியின் உடன்பாட்டைப் பெற்று அந்த திட்டத்தை துரிதமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Related posts

அரச ஊழியர்களின் சேவைக்கான அங்கீகாரத்தை வழங்குவோம் – சஜித்

editor

வருமானத்தை இழந்துள்ள பேரூந்து ஊழியர்களுக்கு அடுத்த வாரம் முதல் நிவாரணம்

கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை அதிகரிப்பு