உள்நாடு

அரச உத்தியோகத்தர்களை வீட்டிலிருந்து பணியாற்றுமாறு கோரிக்கை

(UTV | கொழும்பு) – தினசரி மின்வெட்டைக் குறைப்பதற்கான வழிமுறையை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு முன்மொழிந்துள்ளது.

அதன்படி, அரச உத்தியோகத்தர்களை வீட்டிலிருந்து வேலை செய்யும் முறைமையை எதிர்வரும் சில தினங்களில் நடைமுறைப்படுத்தினால் நாளாந்த மின்வெட்டை மேலும் இரண்டு அல்லது மூன்று மணித்தியாலங்களால் குறைக்க முடியும் என ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.

மின்வெட்டு நேரத்தில் அலுவலகத்தை இயக்க ஜெனரேட்டர் பயன்படுத்த வேண்டும்.

இதற்காக பயன்படுத்தப்படும் டீசலின் அளவையும், தினசரி போக்குவரத்து சேவைகளுக்கு பயன்படுத்தப்படும் டீசலின் அளவையும் குறைப்பதன் மூலம் அந்த அளவு டீசலை மின் உற்பத்திக்கு பயன்படுத்த முடியும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார்.

Related posts

ரோஹினி கவிரத்னவுக்கு கொவிட் தொற்று

45 நாட்களுக்குள் வெளியாகும் புலமைப்பரிசில் பெறுபேறுகள்!

மற்றுமொரு சொகுசு வாகனம் கண்டுபிடிப்பு

editor