உள்நாடு

இலங்கையில் உள்ள பல அரச இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல்

(UTV | கொழும்பு) – இலங்கையில் உள்ள பல அரச இணையத்தளங்கள் மீது இன்று(18) சைபர் தாக்குதல் இடம் பெற்றுள்ளதாக இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு ஒருங்கிணைப்பு மையம் (Srilanka CERT | CC) உறுதிப்படுத்தியுள்ளது.

அதன்படி, இலங்கை சுகாதார அமைச்சகம், இலங்கை மின்சார சபை,ரஜரட்ட பல்கலைக்கழகம் மற்றும் சீன தூதரகம் ஆகியவற்றின் இணையதளங்கள் மீதே சைபர் தாக்குதல் இடம் பெற்றுள்ளது.

இந்நிலையில், சைபர் தாக்குதலுக்குள்ளான இரண்டு இணையத்தளங்கள் இலங்கை கணினி அவசர தயார்நிலை அணியில் உள்ள தகவல் பாதுகாப்பு பொறியாளர்களால் இணையத்தளங்கள் மீண்டும் சரிசெய்யப்பட்டுள்ளன.

ஆனால் எந்த தரவும் திருடப்படவில்லையெனவும் குறித்த இணையத்தளங்களின் தரவுகள் சிதைந்துள்ளது என தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

மற்றுமொரு கொவிட் நோயாளி தப்பிக்க முயற்சி

சில துறைகளுக்கு மாத்திரம் எரிவாயு விநியோகிக்க அனுமதி

கஹவ – தெல்வத்த வரையிலான பகுதிக்கு பூட்டு