உள்நாடு

அரச அலுவலக உதவியாளர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க தீர்மானம்

(UTV|கொழும்பு) – அரச நிறுவனங்களில் ஒப்பந்த, தற்காலிக அடிப்படையில் பணியாற்றும் அலுவலக உதவியாளர்கள் மற்றும் சாரதிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்கு பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சு தீர்மானித்துள்ளது.

இந்தத் தீர்மானத்தை அமுல்படுத்துவதற்குத் தேவையான தரவுகளை அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்கள தலைமை அதிகாரிகள் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர்களிடம் கோரி நேற்று சுற்றுநிரூபம் வௌியிடப்பட்டுள்ளது.

இந்த சுற்றறிக்கைக்கு அமைய, நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ள அலுவலக உதவியாளர்கள் மற்றும் சாரதிகள், 180 நாட்கள் தொடர்ந்து சேவையில் ஈடுபட்டவர்களாகவும் உரிய கல்வித் தகைமைகளை கொண்டவர்களாவும் இருக்க வேண்டும்.

தற்காலிக நியமனக் கடிதங்களைப் பெற்று 3 மாதங்களுக்குள் நிரந்தர நியமனங்களுக்கான கடிதங்களை ஒன்றிணைந்த சேவைகளுக்கான பணிப்பாளர் நாயகத்திற்கு அனுப்பிவைக்க வேண்டும் எனவும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

அனைத்து மதுபானசாலைகளுக்கும் இரு நாட்களுக்கு பூட்டு

சஜித், அனுரவுக்கு சவால் விடுத்த ஜனாதிபதி ரணில்

editor

காணாமல் போன ஊடகவியலாளரின் உடல் சடலமாக கரை ஒதுங்கியுள்ளது.!