உள்நாடு

அரச அதிகாரிகளின் தொலைபேசி கொடுப்பனவுகள் நிறுத்தம்

(UTV | கொழும்பு) – அமைச்சுக்களின் செயலாளர்கள் உட்பட அனைத்து அரசாங்க அதிகாரிகளின் தொலைபேசி கொடுப்பனவுகளில் 25 வீதத்தை நிறுத்துமாறு சுற்றறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ள போதிலும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் கொடுப்பனவுகளை குறைப்பதற்கான சுற்றறிக்கை இதுவரை வெளியிடப்படவில்லை.

இந்த ஆண்டு ஜனவரி 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் அரசு அதிகாரிகளுக்கு இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த கொடுப்பனவை குறைப்பது இம்முறை வரவு செலவு திட்ட முன்மொழிவாகும்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சுற்றறிக்கை வழங்கப்படாததால் கொடுப்பனவு குறைக்கப்பட மாட்டாது என நாடாளுமன்றத்தின் பேச்சாளர் ஒருவர் வினவலுக்கு பதிலளித்தார். எவ்வாறாயினும், நாடாளுமன்ற உறுப்பினர்களின் கொடுப்பனவைக் குறைக்கும் பிரேரணை எதிர்வரும் நாடாளுமன்ற சபைக் குழுவில் விவாதிக்கப்படும் என பேச்சாளர் தெரிவித்தார்.

Related posts

இடம்பெயர்ந்த வடக்கு மக்களுக்கான கொரோனா இடர்கால கொடுப்பனவை துரிதமாக வழங்க நடவடிக்கை

பொதுத் தேர்தல் – மனுக்களை விசாரிக்க ஐவரடங்கிய நீதியரசர்கள் குழு நியமனம்

இன்றைய தினம் நால்வருக்கு கொரோனா