உள்நாடு

அரசுக்கு 11 லட்சம் நஷ்டம் : ஜோஸ்டனுக்கு பிணை

(UTV | கொழும்பு) – 2013ஆம் ஆண்டு சதொச நிறுவன ஊழியர்களை பதவி நீக்கம் செய்ததன் மூலம் அரசாங்கத்திற்கு பதினொரு இலட்சத்துக்கும் அதிகமான நஷ்டம் ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட இரு சந்தேக நபர்களுக்கு பிணை வழங்க கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட மூவருக்கு எதிரான குற்றப்பத்திரிகைகள் கொழும்பு மேல் நீதிமன்றில் கடந்த 09 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டது.

அன்றைய தினம் குறித்த வழக்கில், பாராளுமன்ற உறுப்பினர் உட்பட பிரதிவாதிகள் மூவரையும் தலா 50,000 ரூபா ரொக்கப் பிணையிலும், தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் விடுதலை செய்ய உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டதுடன், அவர்களின் வெளிநாட்டுப் பயணத்தையும் தடை செய்து உத்தரவிட்டார்.

பாராளுமன்ற உறுப்பினர் தவிர சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் எராஜ் பெர்னாண்டோ மற்றும் அதன் முன்னாள் பணிப்பாளர்களில் ஒருவரான மொஹமட் சாகிர் ஆகியோர் இந்த குற்றச்சாட்டில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

 

Related posts

தமது பதவியை இராஜினாமா செய்த பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் உயர்மட்ட அதிகாரிகள்!

கட்சியிலிருந்து விலக்கப்பட்டோர், இருபதுக்கு ஆதரவளித்தோர் உள்ள அணியில் சேரமாட்டோம் – ரிஷாட்

editor

விமானப்படை வரலாற்றை புதுப்பித்த பெண் விமானிகள்