வகைப்படுத்தப்படாத

அரசியல் யாப்பு குழு அதிகாரத்தை பகிர்வது தொடர்பாக பேச்சுவார்த்தை – பிரதமர்

(UDHAYAM, COLOMBO) – அரசியல் யாப்பு குழு அதிகாரம் பகிர்வு தொடர்பில் பேச்சுவார்த்தையை நடத்துவதாகவும் அனைத்து முதலமைச்சர்கள் ,  மாகாணசபைகளுக்கு கூடுதலான அதிகாரத்தை வலியுறுத்துவதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

கொட்டிகாவத்த நாகருக்காராம விஹாரையில் நிர்மாணிக்கப்பட்ட சங்கைக்குரிய லெனகல சுமேதானந்த தேரர் ஞாபகார்த்த தர்ம நிலையத்தை திறந்து வைக்கும் வைபவத்தில் நேற்று பிரதமர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

புதிய அரசியல் யாப்பின் கீழ் நாட்டின் சட்டவாட்சிக்கான அழுத்தத்தை ஏற்படுத்தும் அனைத்து விடயங்கள் தொடர்பில் முழுமையான அதிகாரம் மத்திய அரசாங்கத்தின் கீழும் பாராளுமன்றமும் கொண்டிருக்கும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதேபோன்று மாகாணசபையில் பிரிவினைவாதம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துதல் புதிய அரசியலமைப்பு யாப்பு நடைமுறையின் கீழ் தடைசெய்யப்படுவதாகவும் புதிய அரசியல் யாப்பை வகுக்கும் குழு இந்த விடயத்தில் உடன்பாட்டிற்கு வந்திருப்பதாகவும் பிரமதர் கூறினார்.

அதிகாராத்தை பகிர்வது தொடர்பில் தற்போதைய அரசியல் யாப்பில் தெளிவாக குறிப்பிடப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க புதிய அரசியல் யாப்பின் கீழ் அதிகாரத்தை பகிர்வது தொடர்பில் தெளிவாக குறிப்பிடப்படுவதாகவும் கூறினார்.

தற்பொழுது உடன்பாடு காணப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பிலும் பிரதமர் இங்கு தெளிவுபடுத்தினார்.

உள்ளுராட்சிமன்ற நிறுவனங்கள் மாகாணசபையின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் விடயங்கள் நேரடியாக அறிவிக்கப்படும் என்றும் கிராம இராஜ்ய எண்ணக்கருவின் கீழ் கிராம நிர்வாகம் முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த பாராளுமன்ற உறுப்பினர்களான பிரசன்ன ரணதுங்க மற்றும் துசித்த விஜயமான மாகாண ஆளுனர்கள் முதலமைச்சர்கள் எதிர்க்கட்சிதலைவர்கள் மற்றும் செயலாளர்கள் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தி அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டிருப்பதாகவும் பிரதமர் கூறினார்.

புதிய அரசியலமைப்பின் ஊடாக பௌத்த சமயத்திற்குள்ள முக்கியத்துவம் குறைந்திருப்பதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை பிரதமர் மறுத்தார்.

பாராளுமன்ற அரசியலமைப்பு சபையினால் நியமிக்கப்பட்டுள்ள செயற்குழுவினதும் இணை குழுக்களினதும் அறிக்கைகளை விவாதத்திற்கு உட்படுத்தி, அங்கீகரிக்க வேண்டுமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அந்தக் குழுக்களின் பரஸ்பர எதிர்வாத கருத்துக்களை கலந்துரையாடி இணக்கப்பாட்டிற்கு வந்ததன் பின்னர் இறுதித் தீர்வை எட்ட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டினார். அரசியலமைப்பு சபைக்கு செனற் சபையொன்றை அமைப்பது தொடர்பான யோசனையும் முன்வைக்கப்பட்டுள்ளது. மாகாண சபைகளில் இருந்து தலா ஐந்து பேர் தெரிவு செய்யப்பட்டு இந்த செனற்சபை உருவாக்கப்பட வேண்டுமென யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் கூறினார்.

Related posts

அமைச்சரவை மாற்றம்: சற்று நேரத்தில்

துறைமுக நகர திட்டத்தை பார்வையிட்ட பிரதமர்

MMDA சட்டமூலம் தொடர்பில்: முஸ்லிம் எம்பிகள் கையளித்தவை என்ன ? முழு அறிக்கை இதோ