வகைப்படுத்தப்படாத

அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்ட தொழிற்சங்க போராட்டங்களுக்கு ஆதரவளிக்கப் போவதில்லை

(UDHAYAM, COLOMBO) – அரசியல் இலாபம் தேடும் நோக்கில் முன்னெடுக்கப்படும் எந்தவொரு தொழிற்சங்க நடவடிக்கைக்கும் அரச ஊழியர்கள் ஆதரவு வழங்க மாட்டார்கள் என்று பொது உரிமைகளை பாதுகாக்கும் தொழிற்சங்க பேரவை தெரிவித்துள்ளது.

252 தொழிற்சங்கங்களை உள்ளடக்கி நாளையதினம் 22.05.2017 அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் முன்னெடுக்கவுள்ள தொழிற்சங்க நடவடிக்கையை நோயாளிகளின் நன்மை கருதி அரசியல் மயமாக்க வேண்டாம் என்று ஜாதிக சேவக சங்கத்தின் உப தலைவர் சுனில் டி சில்வா அறpவித்துள்ளார்.

கொழும்பில்  நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்களுடனான  சந்திப்பின் போது  திரு. சுனில் டி சில்வா இதனை கூறினார்.

பொது சேவை தேசிய தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைவர்கள் தேசிய ஐக்கிய தபால் ஊழியர் சங்கம் தேசிய புகையிரத ஊழியர் சங்கம் உட்பட சில தொழிற்சங்க பிரதிநிதிகள் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து  தெரிவித்தனர்.

தொழிற்சங்க நடவடிக்கை என்ற பெயரில் அப்பாவி நோயாளிகளுக்கு பல்வேறு சிரமங்களை ஏற்படுத்தி அரசியல் லாபமீட்ட வேண்டாம் என்றும்    ஜாதிக சேவக சங்கத்தின் உப தலைவர் சுனில் டி சில்வா அறவித்துள்ளார்

Related posts

2019 ක්‍රිකට් ලෝක කුසලානය එංගලන්තයට

Tourism earnings drop by 71% in May

சுவாமி விபுலானந்தரின் 125 வது ஜனன தினத்தை முன்னிட்டு எழுச்சிப் பேரணி