உள்நாடு

அரசியல் அடக்குமுறை தொடர்பான குழு அறிக்கை பிரதமருக்கு

(UTV | கொழும்பு) – நல்லாட்சி அரசாங்கத்தினால் அரசியல் துன்புறுத்தல்களுக்காக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்ட அரச மற்றும் அரை அரச அதிகாரிகளுக்கு நிவாரணம் வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை இன்று(25) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது.

குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற பிரதம நீதியரசர் அசோக டி சில்வாவினால் அலரிமாளிகையில் வைத்து பிரதமரிடம் அறிக்கை கையளிக்கப்பட்டது.

இந்த அறிக்கையை அமைச்சரவைக்கு சமர்ப்பிப்பதற்கு தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு பிரதமர் பணிப்புரை விடுத்துள்ளார்.

ஓய்வு பெற்ற பிரதம நீதியரசர் அசோக டி சில்வா தலைமையிலான குழுவின் ஏனைய உறுப்பினர்களாக ஓய்வு பெற்ற மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி நிஹால் சுனில் ராஜபக்ஷ, வி.கே.சோக்ஸி பிசி, கணக்காளர் கே.எஸ். சந்திரபால டி சில்வா மற்றும் ஓய்வுபெற்ற அரச கணக்காளர் எச்.டி.வீரசிறி. குழு செயலாளராக பிரதமர் அலுவலகத்தின் சட்ட இயக்குனர் வழக்கறிஞர் தக்ஷிதா தேவபுரா ஆகியோர் உள்ளடங்குவர்.

Related posts

தமிழர்கள் அனைவருக்கும் சுபீட்சமும் மகிழ்ச்சியும் நிறைந்த தைப்பொங்கல் – ரணில் விக்ரமசிங்க

‘ஜூன் மாதத்திற்கான எரிபொருள் இறக்குமதிக்காக 554 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவை’

டுபாயில் இருந்து செயற்படும் ‘மினுவாங்கொட மகேஷ் மல்லி’ இன் கூட்டாளிகளிடம் இருந்து துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளது.