அரசியல்உள்நாடு

அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்த முன்னாள் எம்.பி லலித் எல்லாவல

அரசியலில் இருந்து இன்று (27) ஓய்வு பெறுவதாக முன்னாள் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லலித் எல்லாவல தெரிவித்துள்ளார்.

பாணந்துறையில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி கருத்து வௌியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

“ஐக்கிய மக்கள் சக்திக்குள் இருப்பது நாங்கள் எதிர்பார்த்த விடயங்கள் அல்ல. ஐக்கிய மக்கள் சக்தி என்று சொன்னாலும் அதற்குள் ஒற்றுமை இல்லை. பாரிய சர்வாதிகாரம் காணப்படுகிறது. வேலை செய்ய விரும்பும் எவருக்கும் இங்கு வேலை செய்ய அனுமதி இல்லை.”

உதாரணமாக செயலாளரை எடுத்துக் கொள்ளுங்கள். செயலாளரின் பெயர் மட்டும் முதலில் தேசியப்பட்டியலுக்கு அனுப்பப்பட்டது.

ஐக்கிய மக்கள் சக்தி இன்னும் சிறிது காலம் சென்றதும் யானை வாய்க்குள் சென்ற விளாம்பழம் போல் ஆகிவிடும்.

இந்த பிரச்சினைகளால் இன்று முதல் ஐக்கிய மக்கள் சக்தியின் அனைத்து பதவிகளில் இருந்தும் ராஜினாமா செய்கிறேன். இனிமேல் எனது அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடிவு செய்துள்ளேன்” என்றார்.

Related posts

வீடமைப்பு அதிகார சபைக்கு ஜனாதிபதி திடீர் விஜயம்

வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவு – மஹிந்த ராஜபக்ஷ

பாலினத்தை மாற்ற விரும்பும் இலங்கையின் MPக்களுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை!!