சூடான செய்திகள் 1

அரசியலமைப்பு பேரவை இன்று(11) முற்பகல் கூடுகிறது

(UTV|COLOMBO)-புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான அரசியலமைப்பு பேரவை இன்று முற்பகல் பிரதிச் சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் கூடவுள்ளது.

இதன்போது புதிய அரசியலமைப்பு சம்பந்தமான யோசனை ஒன்று சமர்பிக்கப்பட உள்ளது.

அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை இவ்வாறு சமர்பிக்கப்பட உள்ளது.

புதிய அரசியலமைப்பு சம்பந்தமாக ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் தங்களது நிலைப்பாட்டை குறிப்பிட்டு வழங்கியுள்ள அறிக்கையை அடிப்படையாக கொண்டு குறித்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவால் இந்த யோசனை அறிக்கை சமர்பிக்கப்பட உள்ளது.

 

 

 

 

Related posts

மின் விநியோகத்தில் தடை…

தேசிய மெய்வல்லுனர் போட்டி; பாசில் உடையாருக்கு பதக்கம்

340 வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல்…