உள்நாடு

அரசியலமைப்புக்கான முன்மொழிவுகள் ஜனாதிபதியிடம் கையளிப்பு

(UTVNEWS | COLOMBO) – புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்கும் போது கவனத்திற் கொள்ள வேண்டிய விடயங்களை உள்ளடக்கிய முன்மொழிவுகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

இன்று பிற்பகல் கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெற்ற ´பலமானதொரு அரசு – எமது அரசியலமைப்பொன்றுக்கான முன்மொழிவுகள்´ என்ற கருப்பொருளின் கீழ் ´யுத்துகம´ அமைப்பு தயாரித்த முன்மொழிவுகள் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

அவ் அமைப்பின் தலைவர் கெவிது குமாரதுங்க ஜனாதிபதியிடம் அம்முன்மொழிவுகளை கையளித்தார்.

Related posts

கொழும்பு, கம்பஹா மாவட்டங்களுக்கு பஸ் போக்குவரத்து வரையறை தளர்வு

தங்கத்தின் விலையில் வீழ்ச்சி!!

ஜெரோம் பெர்னாண்டோவின் 09 வங்கிகளை சோதனை செய்ய நீதிமன்றாம் அனுமதி!