உள்நாடுசூடான செய்திகள் 1

அரசின் Online சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த அதாவுல்லாஹ் , அலி சப்ரி ரஹீம்!

(UTV | கொழும்பு) –  நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் 46 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டமூலத்துக்கு ஆதரவாக 108 வாக்குகளும் எதிராக 62 வாக்குகளும் அளிக்கப்பட நிலையில் 54 பேர் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை.

எதிர்க்கட்சிகளின், பொதுமக்கள் மற்றும் பொது அமைப்புக்களின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலசினால் செவ்வாய்க்கிழமை (23) சபையில் சமர்ப்பிக்கப்பட்ட நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் மீதான விவாதம் செவ்வாய் மற்றும் புதன் ஆகிய இரு நாட்களாக இடம்பெற்ற நிலையில் புதன்கிழமை (24) விவாத முடிவில் எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி. சட்ட மூலத்தை நிறைவேற்ற வாக்கெடுப்பைக் கோரினார்.

இதனையடுத்து இடம்பெற்ற வாக்கெடுப்பிலேயே நிகழ்நிலை காப்புச் சட்டமூலத்துக்கு ஆதரவாக 108 வாக்குகளும் எதிராக 62 வாக்குகளும் அளிக்கப்பட்ட நிலையில் 46 மேலதிக வாக்குகளினால் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது.

இதில் சட்ட மூலத்துக்கு ஆதரவாக அரசுடன் இணைந்து எதிர்கட்சிதரப்பில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி எம்.பி.யான துமிந்த திசாநாயக்க, சுயாதீன எதிரணி எம்.பி. யான நிமல் லான்ஸா , அலிசப்ரி ரஹீம், அதாவுல்லா, ஜோன் செனவிரத்ன.

அரச தரப்பு எம்.பி.யான ரொஷான் ரணசிங்க எதிராக வாக்களித்தார். ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி.யான வடிவேல் சுரேஷ் ஆகியோர் ஆதரவாக வாக்களித்தனர். எதிர்க்கட்சிகள் அனைத்தும் எதிராகவே வாக்களித்தன.’

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

நாட்டின் பல பகுதிகளில் மழை

இலங்கை மாணவர்களின் விசாக்களில் மோசடி

ரணிலின் வெற்றியின் பங்காளியாக நாமும் கெத்தாக நிற்கவேண்டும் – அமைச்சர் ஜீவன் தொண்டமான்

editor