உள்நாடு

அரசின் பங்காளிக் கட்சிகள் இன்று கூடுகின்றன

(UTV | கொழும்பு) – அரசின் 11 பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்கிடையிலான விசேட கலந்துரையாடலொன்று இன்று(29) பிற்பகல் கொழும்பில் இடம்பெறவுள்ளது.

அவர்கள் தங்கள் கட்சிகளின் எதிர்கால திட்டங்கள் குறித்து ஆலோசிப்பார்கள் என்று ஸ்ரீலங்கா கம்யூனிஸ்ட் கட்சியின் பதில் தலைவர் வீரசுமண வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு மீண்டும் பிரதமர் பதவி வழங்கப்படவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவிவரும் பிரசாரம் தொடர்பில் வீரசுமண வீரசிங்க கருத்து வெளியிட்டார்.

ரணில் விக்ரமசிங்கவுக்கு இந்த பதவி வழங்கப்படுமாயின் அது இலங்கை அரசியலில் மேலும் பல பிரச்சினைகளை உருவாக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

மிகை வரி சட்டமூலம் அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது

வாகன விபத்தில் உப பொலிஸ் அதிகாரி பலி

கொரோனா வைரஸ் – விசேட கூட்டம் ஆரம்பம்