(UTV | கொழும்பு) – அரசாங்கத்தின் 11 பங்காளிக் கட்சிகளின் பங்களிப்புடன் இன்று (29) பொது மாநாடொன்றை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
நாட்டில் தற்போது நிலவும் சமூக – அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் யுகதனவி மின்னுற்பத்தி (LNG) நிலையத்தை அமெரிக்க நிறுவனமொன்றுக்கு வழங்கும் விடயம் தொடர்பில் இன்றைய பொது மாநாட்டில் கலந்துரையாடப்படவுள்ளது.
இந்த மாநாட்டில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஜனநாயக இடதுசாரி முன்னணி, பிவிதுரு ஹெல உருமய, ஶ்ரீலங்கா கமியூனிஸ்ட் கட்சி, லங்கா சமசமாஜ கட்சி, இலங்கை மக்கள் கட்சி உள்ளிட்ட அரசாங்கத்தின் 11 பங்காளிக் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
![](https://english.utvnews.lk/wp-content/uploads/2020/10/UTV-NEWS-ALERT.jpg)