சூடான செய்திகள் 1

அரசாங்க வைத்தியசாலையாகும் நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலை

(UTV|COLOMBO) நெவில் பெர்னாண்டோ போதனா வைத்தியசாலையை இலங்கை ஜயவர்தனபுர பெரிய ஆஸ்பத்திரி போன்ற அரசாங்கத்தின் பெரிய போதனா வைத்தியசாலையாக முன்னெடுப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

பெரும் எண்ணிக்கையிலான மக்களைக்கொண்ட கொழும்பு கிழக்கு கடுவலை மற்றும் மாலபே போன்ற குடியிருப்புப் பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு சுகாதார சேவையை வழங்குவதற்காக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக கொழும்பு கிழக்கு ஆதார வைத்தியசாலைக்கு (முல்லேரியா வைத்தியசாலை) அமைவாக கொழும்பு கிழக்கு போதனா வைத்தியசாலையாக வைத்தியர் நெவில் பெர்னாண்டோ போதனா வைத்தியசாலையை நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சுகாதார போஷாக்கு மற்றும் சுதேசிய வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்தன சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 

 

 

 

 

 

 

Related posts

வசீம் தாஜுதீன் கொலை – சட்ட வைத்திய அதிகாரிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

பால் மா விலை அதிகரிப்பு

ஜனாதிபதி தேர்தல் – கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை ஆரம்பம்