வணிகம்

அரசாங்க வருமானம் 7 வீதத்தால் அதிகரிப்பு

(UTV|COLOMBO)-இவ்வாண்டின் கடந்த செப்டம்பர் மாதம் வரையிலான காலப்பகுதியில் அரசாங்க வருமானம் 7 வீதத்தால் அதிகரித்துள்ளது.

இதற்கமைய, முதல் 9 மாதங்களில் 1.422 பில்லியன் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.

இந்த வருடத்திற்கான இலக்கிற்கிணங்க இது 64 வீத வருமானம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இது 7 வீத அதிகரிப்பாகும்.

இதேவேளை, இந்த வருடத்தின் முதல் 09 மாதங்களுக்கான வரி வருமானம் 1278 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளது.

 

 

 

 

Related posts

சிங்கராஜ வனத்தைப் பார்வையிட வருகின்ற சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி

இன்றும் நாளையும் சர்வதேச விவசாய ஆராச்சி மாநாடு

கிரிஸ்புரோ தயாரிப்புக்கள் வளைகுடா பிராந்தியத்திற்கு ஏற்றுமதி