அரசியல்உள்நாடு

அரசாங்கம் ரணிலின் தொங்கு பாலத்திலே பயணிக்கிறது – நாம் மக்களை ஏமற்றியதில்லை – சஜித் பிரேமதாச

ஒரு நாட்டின் இருப்பு செல்வத்தின் உருவாக்கத்தைப் பொறுத்து அமைகிறது.

உருவாக்கப்படும் இந்த செல்வ சுழற்சி பங்வேறு விதமாக அமைந்து காணப்படுகிறது.

சில அரசியல் கோட்பாடுகள் முதலாளிகளுக்கு மதிப்பளிக்கும் அதே வேளையில், மற்றும் சில உழைக்கும் தரப்புக்கு அதிகாரத்தை வழங்குகின்றன என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ஐக்கிய ஊழியர் சங்கத்தின் பிரதிநிதிகளுடன் இன்று இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

நாம் மனிதாபிமான முதலாளித்துவத்தையே பின்பற்றுகிறோம்.

ஒரு நாட்டின் இருப்புக்கு நிதி ஆற்றலும் செல்வ உருவாக்கமும் அவசியமாகும். இந்த செல்வ உருவாக்கம் சமூக சந்தை பொருளாதாரத்தில் தேவை வழங்கல் அடிப்படையில் நடக்கும் ஒழுங்கு இங்கு காணப்பட வேண்டும். சீனாவும் ரஷ்யாவும் இந்த அணுகுறையை ஏற்றுக்கொண்டுள்ளன.

உற்பத்தி செய்யப்படும் செல்வத்தை சமத்துவத்தை மையமாகக் கொண்ட மற்றும் சமூக நீதியின் அடிப்படையில் சமூகத்தின் சகல பிரிவினருக்கும் சமச்சீரான வழியில் பகிர்ந்தளிக்கும் திட்டமொன்றை இங்கு முன்னெடுக்க வேண்டும்.

ஐக்கிய மக்கள் சக்தி மனிதாபிமான முதலாளித்துவத்தின் மூலம் செல்வத்தை உருவாக்கி, சமூக நீதியில் கவனம் செலுத்தி, சமூக நலனைப் பேணி, சமூக ஜனநாயக கோட்பாடுகளில் அமைந்த நடுத்தர பாதையையே பின்பற்றுகிறது. சாதாரண மக்கள் வாழ்வூட்டுகளை இது வழங்குகிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

சமூக ஜனநாயகத்தை பின்பற்றி வந்த ஐக்கிய தேசியக் கட்சியை தற்போதைய தலைவர்கள் தீவிர முதலாளித்துவத்தின் பக்கம் திருப்பியுள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சியி தொழிற்சங்க நடவடிக்கைகளை உருவாக்கி, கம்உதவா, மஹாபொல, மகவெலி போன்ற திட்டங்களை உருவாக்கியது. இது சமூக ஜனநாயக கொள்கையை கடைபிடித்ததன் விளைவாகும்.

தீவிரவாத முதலாளித்துவத்தைக் கொண்டு இவை உருவாக்கப்படவில்லை. அண்மைக்காலத் தலைவர்கள் நவ லிபரல் கொள்கைகளை ஏற்றுக்கொண்டு தீவிர வலதுசாரி முறைக்கு ஐக்கிய தேசியக் கட்சியை கொண்டு சென்றனர். மிகுந்த தனியார்தனத்தை நோக்கி நகர்த்தினர்.

செல்வந்தர்களை மேலும் செல்வந்தர்களாக்கும், தேவையுடையோரை மேலும் தேவையுடையோர் ஆக்கும் போக்கை கடைப்பிடித்து வந்தனர். இது ஜயவர்தன பிரேமதாச போன்றோரின் கோட்பாடுகள் அல்ல என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார்.

செல்வந்தர்களை விட உழைக்கும் மக்களே எமக்கு முக்கியம்.

SJB யும் UNP யும் ஒன்றல்ல. இவை வேறு வேறான கொள்கைகளை கொண்டுள்ளன. அதன் பிரகாரமே செயல்பட்டு வருகின்றன.
வங்குரோத்தான நாட்டில் IMF இன் கடன் சலுகையைப் பெற்றுக் கொள்வதற்கு உள்நாட்டு கடன் மறுசீரமைப்புக்கு சென்ற போது, கடந்த அரசாங்கம் வங்கிக் கட்டமைப்பையும் பிணை முறி பத்திரதாரர்களையும் பாதுகாத்தது. உழைக்கும் மக்களின் நலன்களில் கை வைத்தது, உழைக்கும் மக்களின் சேமிப்பான ஊழியர் சேம இலாப நிதியங்களில் கை வைத்து, அவர்களினது சேமிப்புகளை உருஞ்சின.

ஐக்கிய மக்கள் சக்தி இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. செல்வந்தர்களை விட சாதாரண மக்கள் மீது அக்கறை கொண்டு சமூக நீதியையும் சமநிலை பேணலையும் எமது கட்சி பின்பற்றி வருகிறது. சமூக சமத்துவத்தை எட்டுவதற்கு நடுத்தர பாதையில் பயணிக்கும் கட்சியாக ஐக்கிய மக்கள் சக்தி செயல்பட்டு வருகிறது என எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு என்பது கனவாகவே காணப்படுகின்றது.

ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் ஒரு தடவையும் 20000 ரூபாவால் சம்பள அதிகரிப்பை பெற்றுத் தருவோம் என தற்போதைய ஆளுந்தரப்பினர் கூறியிருந்தனர். ஆனால் கூறியதை மறந்து பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு, ஒன்றன் பின் ஒன்றாக பொய்களை உரைத்து வருகின்றனர்.

பொய்யும், ஏமாற்றுமே அரசின் நிகழ்ச்சி நிரலாக இருந்து வருகிறது. வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக சம்பள கொடுப்பனவுகளை அதிகரிப்பது தொடர்பில் காம்பீரமாக பேசினர். ஆனால் சம்பள அதிகரிப்பு தொடர்பில் இன்னமும் சரியான தீர்மானம் எடுக்க முடியாதுள்ளதாக தற்போதைய நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

எல்லாவற்றையும் மூடி மறைத்து நடந்து வருகின்றனர். கொடுப்பனவுகளை வெட்டி விட்டு சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். காம்பீரம் இது தானா? இந்த சம்பள அதிகரிப்பு குழப்பம் நிறைந்ததாக மாறியுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கம் ரணிலின் தொங்கு பாலத்திலே பயணிக்கிறது.

கடந்த அரசாங்கம் பயணித்த தொங்கு பாலத்திலே இந்த அரசாங்கமும் பயணிக்கிறது. அதே வழிமுறைகளையே பின்பற்றி வருகிறது. மொத்த உள்நாட்டு உற்ப்பத்தியில் முதன்மை செலவை 13% ஆக மாற்றியுள்ளனர்.

மொத்த உள்நாட்டு உற்ப்பத்தியில் முதன்மை இருப்புத் தொகையும் +2.3% ஆக்கியுள்ளனர். அரசாங்கம் இவற்றை மறைத்து வருகிறது. சர்வதேச நாணய நிதியத்துடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

இவ்வாறான பேச்சுவார்த்தையை நடத்த மாட்டார்கள் என்பது அரசாங்கத்தின் நடவடிக்கைகளில் இருந்து நன்றாக தெரிகிறது. இவ்வாறு போனால் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது.

இவ்வாறே போனால் மற்றுமொரு கடன் மறுசீரமைப்பிற்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும். அரசாங்கம் இவற்றை மறைத்து மக்களை முட்டாள்களாக்கி வருகிறது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

குறுகிய காலத்தில் மூன்றாவது முறையாக மக்கள் அபிப்பிராயத்தை கேட்கும் தேர்தல் வரப்போகிறது. இந்த தேர்தலுக்கு மத்தியில் அரச ஊழியர்களால் சரியான தீர்மானத்தை எடுக்க முடியும். ஐக்கிய மக்கள் சக்தி எப்போதும் தொழிலாளர்களையும் உழைக்கும் மக்களையும் பாதுகாக்கும். உழைக்கும் மக்கள் இல்லாமல் ஒரு நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப முடியாது.

அவர்களை மறந்து நடக்க முடியாது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி உருவாக்கப்பட்டு 5 வருடங்கள் நிறைவடைந்துள்ளன. ஐக்கிய ஊழியர் சங்கம் இதில் பாரிய பங்களிப்பை ஆற்றி வருகின்றது என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

Related posts

சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை

சரக்கு தொடருந்தில் பாய்ந்து இளம் பெண் ஒருவர் தற்கொலை!

கொழும்பு கிராண்ட்பாஸ் சோதனையில் 61 பேர் கைது