அரசியல்உள்நாடு

அரசாங்கம் உறக்கத்தில் முட்டாள்தனமாக பேசி வருகிறது – சஜித் பிரேமதாச

தற்போதைய அரசாங்கத்தின் பொய்கள் மற்றும் ஏமாற்று நடவடிக்கைகளால் நாட்டு மக்கள் பெரும் விரக்தியில் ஆழ்ந்துள்ளனர்.

விண்ணை முட்டும் பொருட்களின் விலையேற்றத்தால் வாழ்க்கைச் சுமை அதிகரித்துள்ள வேளையில், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எமது நாட்டின் ஏற்றுமதிகளுக்கு 44% தீர்வை வரி விதித்திருப்பது மேலும் பொருளாதார அழிவை ஏற்படுத்தியுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

முறையான பொருளாதார வேலைத்திட்டம் இன்மையால் நாடு பொருளாதார அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கடந்த 06 ஆம் திகதி இரவு புத்தளம் நுரைச்சோலையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போது தெரிவித்தார்.

இன்றைய நிலவரப்படி எரிபொருள் மற்றும் எண்ணெய் மானியங்கள் வழங்கப்படவில்லை.

உரம மானியமும் வழங்கப்படவில்லை. அரசாங்கம் இந்த வரிக் கொள்கை தொடர்பில் சரியான நிலைப்பாட்டில் இல்லை. அரசாங்கம் உறக்கத்தில் முட்டாள்தனமாக பேசி வருகிறது.

இவ்வாறே போனால் நாடு பொருளாதார ரீதியாக பெரும் ஆபத்தில் விழும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இந்த பாரதூரமான பிரச்சினைக்கு அரசாங்கத்திடம் இருந்த வந்த ஒரே தீர்வு குழுவை நியமிப்பதாகும்.

ஆனால் இது போதுமானதாக இல்லை. இன்னும் ஆராய்கிறார்கள் தான். உடனடி நடவடிக்கைகளை எடுத்து ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தைக்கு இன்றளவில் சென்றிருக்க வேண்டும்.

அது நடக்கவில்லை. 2028 ஆம் ஆண்டுக்கான கடனை செலுத்துவதிலும் இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

மாடியில் இருந்து விழுந்த சிறுவன் படுகாயம்

ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட 10 பேருக்கு பிணை

editor

சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் வைத்தியசாலையில் துஷ்பிரயோகம் – ஒருவர் கைது

editor