சூடான செய்திகள் 1

அரசாங்கத்தை கவிழ்ப்பது எமது செயற்பாடு அல்ல-நவீன் திஸாநாயக்க

(UTV|COLOMBO)-இலங்கை மருத்துவ சபைக்கு நியமிக்கப்பட்டுள்ள புதிய தலைவர் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

புதிய தலைவர் மருத்துவ சபையில் சுயாதீனமாக செயற்படுவார் என நம்புவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர், வைத்தியர் நளிந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது கருத்து தெரிவித்த வைத்தியர் நவீன் திஸாநாயக்க, அரசாங்கத்தை கவிழ்ப்பது அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயற்பாடு அல்ல என தெரிவித்துள்ளார்.

 

 

 

 

Related posts

BREAKING NEWS – வெலிகம பிரதேச சபைத் தலைவர் மீது துப்பாக்கிச் சூடு

editor

பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அவரது சகோதரருக்கு விளக்கமறியல்

பிரதமர் தலைமையில் ஆளுந்தரப்பு கட்சிகளுடன் விசேட சந்திப்பு