உள்நாடு

அரகலயவின் போது ஆயுதமேந்தாத பொதுமக்களை கொலை செய்வதற்கு நான் விரும்பவில்லை – சவேந்திர சில்வா

அரகலயவின் போது ஆயுதமேந்தாத பொதுமக்களை கொலை செய்வதற்கு தான் விரும்பவில்லை, என முன்னாள் இராணுவதளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

சவேந்திர சில்வா தனது ஓய்விற்கு முன்னர் வெளியிட்டுள்ள விரிவான அறிக்கையில் 2022 அரகலய உட்பட தனது பதவிக்காலத்தில் இடம்பெற்ற குறிப்பிடத்தக்க சம்பவங்கள்குறித்து குறிப்பிட்டுள்ளார்.

2022 உள்நாட்டு குழப்பம் எனது இராணுவ வாழ்க்கையின் மிகவும் குழப்பமான ஒரு தருணம் அது எனது உண்மையான நண்பர்கள் யார் எதிரிகள் யார் என்பதை வெளிப்படுத்தியது. என தெரிவித்துள்ள அவர் தேசத்திற்கு உள்நாட்டிலிருந்தோ வெளிநாட்டிலிருந்தோ ஆபத்து ஏற்பட்டால் தேசத்தை பாதுகாப்பதற்காக தயாராகயிருக்கும் உத்தியோகபூர்வ இராணுவமே தேசத்தின் இராணுவம் என அவர் தெரிவித்துள்ளார்.

2022 எழுச்சி ஒரு உள்நாட்டு பொது அமைதியின்ம,ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டுப்படுத்துவதற்கு ஆகக்குறைந்த பலத்தையே பயன்படுத்துமாறு நான் இராணுவீரர்களிற்கு உத்தரவிட்டேன், இராணுவத்தின் துப்பாக்கி பிரயோகத்தினால் பொதுமக்களில் ஒருவர் கூடஉயிரிழப்பதை நான் விரும்பவில்லை என சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

ஆயுதமேந்தாத பொதுமக்களை எனது அதிகாரத்தை பயன்படுத்தி படுகொலை செய்யும் ஒருவனாக நான் மாறவிரும்பவில்லை,அதன் காரணமாக நாடு குழப்பத்தில் சிக்கவில்லை, அயல்நாடுகளில் பொதுமக்களின் போராட்டங்களை ஒடுக்குவதற்காக கையாளப்பட்ட இராணுவ நடவடிக்கைகளினால் ஏற்பட்டுள்ள எதிர்மறையான விளைவுகள் இதற்கு சிறந்த உதாரணம் எனவும் தெரிவித்துள்ளார்.

தனக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்;டுகளை நிராகரித்துள்ள அவர் தனக்கு தனிப்பட்ட நோக்கங்கள் இருந்தாக தெரிவிக்கப்படுவதை மறுத்துள்ளார்.

‘ அதிகார வெறிபிடித்த ஆட்சியாளர்கள் கூறுவது போல அரசாங்கத்தை கவிழ்க்கவேண்டும் என்ற மோசமான நோக்கம் என்னிடம் இல்லை, வெளிநாடொன்றின் சதுரங்க காயாக மாறவேண்டும் அல்லது வெளிநாட்டு தூதரகத்தின் செல்லப்பிள்ளையாக விளங்கவேண்டும் என்ற நோக்கமும் எனக்கில்லை என சவேந்திரசில்வா தெரிவித்துள்ளார்.

Related posts

ரஷ்யாவில் இருந்து நாடு திரும்பிய ​மேலும் 181 இலங்கையர்கள்

பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு

தாதியர்கள் நாளை பாரிய கவனயீர்ப்பு போராட்டம்!